மாற்றம் ஒன்றே மாறாதது!
கொங்குநாடு பள்ளி அழகப்பா கல்லூரியாய் மாறக் கண்டேன்!
அரும்பு மீசை இரும்பாய் மாற எதிர்பார்ப்புகள் அதிகரிக்க கண்டேன்! என் முதுக்குப்பின் ஒருவர் கையில் கத்தியோடு காத்திருக்க கண்டேன்!
அது "நண்பனாக" இருக்கக்கூடும் ஆச்சரியம் கண்டேன் ! என் தாய்தேசம் தலைமீது ஒற்றை மயிரால் கத்தி தொங்கவிடப் படுவதையும் கண்டேன்! குருவிகளின் கூக்குரல் அபாயக்குரல் ஆனதையும் கண்டேன் !
இவற்றுக்கு எல்லாம் தீர்வாய் "விதை" விதைக்கப் படுவதையும் காண்பேன்!
No comments:
Post a Comment